சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

இயக்குனர் ஷங்கர் நடிக்கும் வாய்ப்பு…..நடக்குமா ?

இயக்குனர் ஷங்கர் நடிக்கும் வாய்ப்பு…..நடக்குமா ?
Advertisement
எழுத்து அளவு
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்றழைக்கப்படுபவர் ஷங்கர். அவர் இயக்கத்தில் இறங்குவதற்கு முன்பு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பதற்காக வந்தவர், பின்னர் இயக்குனராக மாறிவிட்டார்.அவருக்குத் தற்போது ஒரு முக்கியமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அது நடக்குமா நடக்காதா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட சிபி சக்கரவர்த்தி அவர் எழுதிய கதைக்கு, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் பொருத்தமானவர் இயக்குனர் ஷங்கர் என சொல்லி இருக்கிறார். அவரிடமும் கதை சொல்லப்பட்டு அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.இந்நிலையில் படத்தின் திரைக்கதை விஷயத்தில் ரஜினிக்கும், சிபிக்கும் இடையே கருத்து மோதல் வந்துள்ளது. அதனால், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் அப்படத்திற்குத் திரைக்கதை எழுதி வருகிறாராம். இரண்டில் எது தேர்வாகிறதோ அதுதான் படமாகும் என்கிறார்கள். அப்படி அஸ்வத் எழுதிய திரைக்கதை தேர்வானால் சிபி இந்தப் படத்திலிருந்து விலகுவார் என்கிறார்கள். சிபி எழுதிய திரைக்கதையில்தான் ஷங்கர் வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். அஸ்வத் அவரது திரைக்கதையில் மாற்றியிருந்தால் அது நடக்காது என்று சொல்லப்படுகிறது. எது நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

பைசன் படத்துக்குபின் தனுஷை வைத்து படம் இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்காத ஜானரில் அந்த படம் உருவாக போகிறது. அதற்கான பட்ஜெட்டும் மிக அதிகம் என கேள்வி. இப்படிப்பட்ட


ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில்  நடக்குமா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாகி விட்டது. ஜெயிலர் 2 போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் நெல்சன்,


திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து

திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து

நடிகர் சமுத்திரக்கனி இயக்கிய படங்கள், அவரின் மேடை பேச்சு, செயல்பாடுகளை பார்த்தவர்கள் அவரை நாத்திகர் என்றே சொல்வார்கள். அப்படிதான் அவரின் செயல்பாடுகள் அமைந்து இருந்தது. இந்நிலையில்,

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map