சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

தொடர்கிறது பிரித்விராஜின் ஈகோ யுத்தம்

தொடர்கிறது பிரித்விராஜின் ஈகோ யுத்தம்
Advertisement
எழுத்து அளவு
கடந்த வருடம் கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை மலையாள திரையுலகில் வெளியான படங்களில் நடிகர் பிரித்விராஜ் படங்களே அதிகம். அது மட்டுமல்ல தற்போது அதிக படங்களிலும் நடித்து வருகிறார் பிரித்விராஜ். அந்தவகையில் அவர் நடித்துள்ள ஜனகணமன என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தற்போது அவர் நடித்து வந்த விலாயுத் புத்தா என்கிற படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப்படம் இந்துகோபன் என்பவர் எழுதிய விலாயுத் புத்தா என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் பாஸ்கரன் பிள்ளை என்கிற இன்னொரு முக்கிய கதாபாத்திரமும் இருக்கிறது. இந்த இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் தான் இந்த படத்தின் கதை. பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய இரண்டு படங்களும் இரண்டு நபர்களுக்கான ஈகோ மோதலை மையமாக வைத்து உருவாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றன. அந்தவகையில் பிரித்விராஜூக்கு இந்த ஈகோ யுத்தம் சென்டிமென்ட் இந்த படத்திலும் கைகொடுக்கும் என நம்பலாம்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பிறமொழி செய்திகள்

காணாமல் போன மோகன்லால் பட இயக்குனர் ; புதிய இயக்குனர் படத்தை இயக்குகிறார்

காணாமல் போன மோகன்லால் பட இயக்குனர் ; புதிய இயக்குனர் படத்தை இயக்குகிறார்

மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 230 கோடி வரை வசூலித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் தருண்மூர்த்தி


பாடகர் வேடனின் செயினில் இருப்பது புலிப்பல் தான் ; ஆய்வறிக்கை வெளியானதால் சிக்கல்

பாடகர் வேடனின் செயினில் இருப்பது புலிப்பல் தான் ; ஆய்வறிக்கை வெளியானதால் சிக்கல்

சமீப வருடங்களாக மலையாளத்தில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி வருபவர் ராப் பாடகர் வேடன். கடந்த வருடம் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல்


இத்தனை நாளாக செய்யாத ஒரு விஷயத்தை ஐம் நோபடி படப்பிடிப்பில் செய்த பார்வதி

இத்தனை நாளாக செய்யாத ஒரு விஷயத்தை ஐம் நோபடி படப்பிடிப்பில் செய்த பார்வதி

நடிகை பார்வதி நடிப்பில் கடந்த வருடம் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது மலையாளத்தில் பிரதம திருஷ்த்யகார் மற்றும் ஐம் நோபடி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map