சின்னத்திரைக்கு திரும்பிய நடிகர் அசோக்
2007ம் ஆண்டு வெளியான "முருகா" படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக். அதன்பிறகு பிடிச்சிருக்கு, கோழிகூவுது, காதல் சொல்ல ஆசை, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், கனிகாபுரம் சந்திப்பு, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். வானம் பார்த்த சீமையிலே, உலா, பிரியமுடன் பிரியா உள்ளிட்ட சில படங்கள் வெளிவரவில்லை.
சினிமா வாய்ப்புகளும், வெற்றிகளும் சரியாக அமையாத இளம் நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவது புதிதில்லை. அந்த வரிசையில் தற்போது அசோக்கும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். ஜீ தமிழ் டி.வி.யில் மதியம் 1 மணிக்கு, "மவுனம் பேசியதே" என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
அவரவர் விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும், பரஸ்பர விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் என இரு ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவர்கள் ஒரே பேருந்தில் பயணிக்க, பேருந்து விபத்தில் சிக்குகிறது. அதில் இரு ஜோடிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியங்கள்தான் தொடரின் கதை.
அசோக் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு "ஸ்ரீகிருஷ்ணா" உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.