பிக்பாஸ் நமீதா மாரிமுத்துவுக்கு விருது! குவியும் பாராட்டுகள்!
நமீதா மாரிமுத்து திருநங்கை சமூகத்தை சேர்ந்த பிரபல மாடர்ன் அழகி ஆவார். பேஷன் ஷோ, மாடலிங், சினிமா ஆகிய துறைகளில் ஆக்டிவாக பயணித்துக் கொண்டிருக்கும் நமீதா, திருநங்கையர்களுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி நேயர்களின் மனதை கவர்ந்தார். பிக்பாஸ் வீட்டினுள் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இதனால் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், அவர் கடந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான "மிஸ் இண்டர்நேஷனல் குயின் - 2022" போட்டியில் கலந்துகொண்டு "மோஸ்ட் பாப்புலர் வோட்" என்ற விருதினை பெற்றுள்ளார். மேலும், டாப் 10 பட்டியலில் 8வது இடத்தையும் பிடித்துள்ளார். அந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து இந்திய கடவுளான அர்த்தநாரீஸ்வரர் கெட்டப்பில் நடந்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.