சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

எப்போது ரீ-என்ட்ரி? ஆல்யாவின் பதிலால் குஷியான ரசிகர்கள்

எப்போது ரீ-என்ட்ரி? ஆல்யாவின் பதிலால் குஷியான ரசிகர்கள்
Advertisement
எழுத்து அளவு

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா, ராஜா ராணி 2 சீசனில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டது. எனவே, அவரின் ரீ என்ட்ரியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சோஷியல் மீடியாக்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் ஆல்யா - சஞ்சீவ் தம்பதியினர் ஆல்யாவின் கம்பேக் எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு யூ-டியூப் சேனலில் பதிலளித்துள்ளனர்.

அந்த வீடியோவில் ரசிகர்களின் கேள்விகளை சஞ்சீவ் ஆல்யாவிடம் கேட்க அதற்கு ஆல்யா பதிலளிக்கிறார். அப்போது "பழைய ஆல்யாவ எப்போது பாக்கலாம்? எப்பதான் கம்பேக் கொடுப்பீங்க?" என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, "ஷூட்டிங் போனா ஒழுங்க டயட் இருக்கனும். ஆன் டைம்ல தூங்கி எந்திரிக்கனும். அதனால, கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணிட்டு, நல்ல சாப்பிட்டு ஆரோக்கியமாகனும். அப்புறம் வொர்க்-அவுட் செஞ்சு ட்ரிம் ஆனதுக்கு அப்புறம் ஷூட்டிங் போகலாம்" என கூறியுள்ளார். ஆல்யாவின் இந்த பதிலால் அவர் கட்டாயம் கம்பேக் கொடுக்க போகிறார் என ரசிகர்களுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. எனவே, இந்த முறையும் 6 மாதத்திற்கு பிறகு ஆல்யா புதிய சீரியலில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

மேலும் படிக்க

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

மேலும் படிக்க

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map