சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

அசீம் தான் பிரச்னையா? -ராதிகா ப்ரீத்தி விளக்கம்

அசீம் தான் பிரச்னையா? -ராதிகா ப்ரீத்தி விளக்கம்
Advertisement
எழுத்து அளவு
பூவே உனக்காக தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்து வந்தார். சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ராதிகா ப்ரீத்தி திடீரென விலகினார். இதற்கு அசீம் தான் காரணம் என்று சக நடிகர்கள் பலரும் பேட்டி கொடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா ப்ரீத்தி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "அசீமுக்கும் எனக்கும் பலமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை வந்துள்ளது. அதை மறுநிமிஷமே மறுந்துவிடுவோம். அசீம் எனக்கு நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது. ஆனால், எங்கள் முதுகுக்கு பின்னால் எங்களை தவறாக பேசினார்கள்" என கூறியுள்ளார். மேலும், சீரியலை விட்டு விலகியதற்கான காரணங்களை அடுக்கிய அவர், "ஒன்றரை வருடம் சம்பளமில்லாமல் நடித்தேன். உடல் அளவிலும் பிரச்னை இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் டாய்லட் வசதி செய்து தரவில்லை. அங்கிருக்கும் வீடுகளில் ரிக்வஸ்ட் செய்து தான் டாய்லட் பயன்படுத்தினோம்" என இதுபோல் பல கொடுமைகளை சீரியலில் நடிக்கும் போது அனுபவித்ததாக ராதிகா ப்ரீத்தி கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா

சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான ஜூலிக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அட்வைஸ்

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள்

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map