பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங் படப்பிடிப்பு நிறைவு
ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் முதன்முதலாக இணைந்த பிரபுதேவா, வடிவேலு இருவரும் அதன்பிறகு ‛ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா" உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தார்கள். அவர்கள் காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர்கள் இருவரும் ‛பேங் பேங்" என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஷாம் ரோட்ரிகஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இப்படத்தை தயாரித்துள்ள கண்ணன் ரவி குரூப் நிறுவனம் தங்கள் எக்ஸ் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி கதைக் களத்தில் உருவாகி உள்ளதாம்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.