சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ரஜினி அறக்கட்டளை துவக்கம் : மகத்தான மாற்றம் வருமாம்

ரஜினி அறக்கட்டளை துவக்கம் : மகத்தான மாற்றம் வருமாம்
Advertisement
எழுத்து அளவு

சென்னை : "ரஜினி அறக்கட்டளை துவக்கம் சிறிய ஆரம்பம் மட்டுமே; இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும்" என ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர் மன்றத்தின் அறிக்கை : ரஜினி அறக்கட்டளையும், அதன் இணையதளமும் டிச., 26ல் துவக்கப்பட்டது. ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்த, இந்த அறக்கட்டளை ரஜினியால் துவக்கப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டின் வாயிலாக முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை கட்டமைக்க உருவாக்கப்பட்டது.

எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும், எங்களின் ஆரம்ப முயற்சியை, தமிழகத்தில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழக மக்களின் கருணையும், அன்பும் தான் ரஜினிக்கு இவ்வளவு பெயர், புகழை பெற்று தந்தது. நம் அறக்கட்டளை சிறிய ஆரம்பம். அடுத்து நிலையான முயற்சி; சுய திருத்தம். இறுதியில் இதுவே மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறோம்.

ரஜினி ஆசியுடன் இலவச டி.என்.பி.எஸ்.சி; போட்டி தேர்வு பயிற்சிக்கான, "சூப்பர் 100 பிரிவு"க்கான பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அறக்கட்டளையின், www.rajinikanthfoundation.org/tnpsc.html என்ற இணைய முகவரி வாயிலாக பதிவு செய்யலாம். அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை வழக்கறிஞர் ம.சத்யகுமார், ம.சூர்யா ஆகியோர் கவனிப்பர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

தெலுங்கில் F2, F3, பகவந்த் கேசரி, சங்கராந்திகி வஸ்துனம், மன சங்கரா வர பிரசாத் காரு உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கி பெயர் பெற்று முன்னனி இயக்குனராக வலம் வருபவர் அனில் ரவிபுடி.


பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள்

பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள்

1991ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த படம் நாட்டுக்கொரு நல்லவன். கன்னட நடிகர் ரவிச்சந்திரன் தயாரித்து, நடித்திருந்தார். ஜூகி சால்வா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது


பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

1980களில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் கருப்பு சுப்பையா. ஏற்கெனவே வெள்ளை சுப்பையா என்று ஒருவர் இருந்ததால் இவர் தனது பெயரை

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map