புது சீரியலில் கமிட்டாகி கெத்து காட்டும் ரியா விஸ்வநாத்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரில் ஆல்யா மானசாவுக்கு பின் ரியா விஸ்வநாதன் ஹீரோயினாக நடித்து வந்தார். போலீஸ் ஐபிஎஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஹைட் அண்ட் வெயிட்டுடன் இருந்த ரியாவை சில தினங்களுக்கு முன் சீரியலை விட்டு திடீரென நீக்கிவிட்டனர். இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பதிவுகளில் "இனி நான் சந்தியா இல்லை" என்று அறிவித்திருந்த ரியா, சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்தும் சில பேட்டிகளில் கூறியிருந்தார். இதனால் ரியா விஸ்வநாத் கேரியர் என்னவாகும்? அவர் தொடர்ந்து நடிப்பாரா? என ரசிகர்கள் ஐயமுற்றனர்.
இந்நிலையில், ரியா விஸ்வநாத் ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் "சண்டைக்கோழி" தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஒரு சேனல் தன்னை சீரியலை விட்டு நீக்கிய சில நாட்களிலேயே மற்றொரு சேனலின் புது சீரியலில் ஹீரோயினாக கமிட்டாகி ரியா கெத்து காட்டியுள்ளார். இந்த மகிழ்ச்சியை ரியாவின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.