எதிர்நீச்சல் 2 தொடரில் நான் இல்லையா - சத்யப்ரியா கேள்வி
மக்களின் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் சீசன் 2 மிக விரைவில் வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயின் உட்பட பல நடிகர்கள் மாறிவிட்டனர். ஜனனியாக நடித்து வந்த மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி, ஐஸ்வர்யாவாக நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு பதில் ஜானு என தாராவாக நடித்து வந்த சிறுமிவரை பல நடிகர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யாப்ரியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கவில்லை என்றால் யாராவது வருத்தப்படுவீர்களா? யார் என்னை மிஸ் செய்ய போகிறீர்கள்" என்று கேட்டிருந்தார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் பலரும் சத்யப்ரியா நடிக்க வேண்டும் என்று கேட்க, அடுத்ததாக வெளியிட்டுள்ள பதிவில் நான் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலா? என கெத்தாக கேட்டுள்ளார். இதன்மூலம் விசாலாட்சி கதாபாத்திரத்தில் சத்யப்ரியா தொடர்ந்து நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
சின்னத்திரை
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.