சவுந்தர்யாவின் லவ் புரொபோஸ் ஸ்கிரிப்ட்டா? விஷ்ணு பளீச் பேட்டி
பிக்பாஸ் வீட்டில் விளையாடி வரும் சவுந்தர்யா அந்நிகழ்ச்சியிலேயே விஷ்ணுவிடம் லவ் புரொபோஸ் செய்தார். இதை பலரும் ஸ்கிரிப்ட் என சமூக வலைதளங்களில் எழுதி வரும் நிலையில், விஷ்ணு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதிலிருந்து, "நானும் சவுந்தர்யாவும் நல்ல நண்பர்கள். அவருக்கு என்னை பிடிக்கும் என நண்பர்கள் மூலம் தெரியும். எனக்கும் அவரை பிடிக்கும். நான் முதலில் புரொபோஸ் செய்தால் எதுவும் நெகட்டிவ் ஆகிவிடக் கூடாது என பயந்தேன். எனவே, ஒரு நண்பனாக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தேன். அதன்பின் நடந்ததெல்லாம் எதிர்பாராத ஒன்று. சிலர் இதை ஸ்கிரிப்ட், டிஆர்பி என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு பெண் ஊரறிய ஒரு பையனிடம் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்பதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறோம். கொஞ்சநாள் காதலித்துவிட்டு விரைவிலேயே திருமணம் செய்து கொள்வோம்" என்று கூறியிருக்கிறார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.