சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

கோலங்கள் - எதிர்நீச்சல் வித்தியாசம் சொன்ன இயக்குநர்

Published

கோலங்கள் - எதிர்நீச்சல் வித்தியாசம் சொன்ன இயக்குநர்
Advertisement
எழுத்து அளவு

சின்னத்திரை இயக்குநர் திருசெல்வம் இயக்கிய அனைத்து தொடர்களிலுமே பெண்களுக்கும், பெண்கள் விடுதலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக "கோலங்கள்" தொடரின் அமோக வெற்றியை தொடர்ந்து தற்பொது "எதிர்நீச்சல்" தொடரும் வெற்றிநடை போட்டு வருகிறது. அதிலும், தொடரின் ஆரம்பம் முதலே சைலண்டாக இருந்த பம்பாய் ஞானம் கதாபாத்திரத்தை வைத்து சமீபத்தில் அவர் கொடுத்து வரும் டுவிஸ்டை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் ரசித்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் சின்னத்திரை நடிகையும் தற்போது எதிர்நீச்சல் தொடரின் வசனகர்த்தாவுமான ஸ்ரீவித்யா கோலங்களில் வரும் பெண்களுக்கும் எதிர்நீச்சலில் வரும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என்று இயக்குநர் திருசெல்வத்தை கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர், "கோலங்களில் வரும் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா, மேனகா ஆகியோர் வீட்டில் சுதந்திரமாக இருந்து வெளியே சுதந்திரத்தை தேடியவர்கள்.

ஆனால், எதிர்நீச்சலில் வரும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் வீட்டிற்குள்ளேயே சுதந்திரத்தை இழப்பதால் தங்கள் சுயத்தையும் இழந்தவர்கள். அதனால் வெளியிலேயும் என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்கள். எனவே, அவர்கள் முதலில் வெளியே வருவார்கள். சுயத்தை மீட்பார்கள். சுதந்திரமாக வாழ்ந்து மிகப்பெரிய வெற்றியை காண்பார்கள். அப்படி பார்த்தால் கோலங்கள் பெண்களும் சரி எதிர்நீச்சல் பெண்களும் சரி வெற்றி பெற்றவர்களே" என்று கூறியுள்ளார்.

திருசெல்வத்தின் இந்த பதிலால் பெண் ரசிகைகள் பலரும் மகிழ்ச்சியடைந்து அவரை பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்


ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map