ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம்
சட்டத்தில் ஓட்டைசைபர் குற்றங்கள் வழக்கறிஞர் சுந்தரகாடேஸ்வர் கூறுகயைில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், ஓ.டி.டி.தளங்களில் ஆபாசங்களை திணிக்க முக்கிய காரணம் . உதாரணமாக உடல் முன்பகுதியை நிர்வாணமாக காட்டக்கூடாது என்று மட்டுமே சட்டம் தடை செய்துள்ளது. அதனால் பின்பக்க நிர்வாண கோலத்தை வயது வந்தோருக்கு மட்டும் என்ற முத்திரையுடன் ஒளிபரப்ப முற்படுகின்றனர். நிர்வாண காட்சிகளுக்கு முற்றிலுமாக தடை விதித்து சட்டத்தின் தவறே பெண்களை அநாகரிமாக சித்தரித்தல் தடை சட்டத்தில் (ஐ.ஆர்.டபிள்யு.) திருத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்றார்.அபாயகரமாக விளைவுபெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக சேவை செய்யும் அறம், அறக்கட்டளையின் அறங்காவலர் மாதவன் கூறுகையில், கொரோனாவுக்கு பின் இணையத்தின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஓ.டி.டி., இயங்கு தளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் பாடல்களில் நெருக்கமான காட்சிகள் வரும் போது திரைப்படங்களை பார்க்க குடும்பங்கள் சேனலை மாற்றிவிடுவர். ஆனால் இப்போது எல்லாம் இயல்பானதாகவே கருதப்படுகிறது. இத்தகைய வெளிப்பாடு மெதுவாக குடும்ப கட்டமைப்பை நாசப்படுத்துகிறது. இப்போது ஒவ்வொரு வரும் ஒரு கேஜெட் வைத்துள்ளனர். இது நிச்சயமாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனதில் ஒரு எதிர்மறையைான தாக்கத்தை ஏற்படுத்தும். விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும் என்றார்.மனநலம் பாதிக்கும்மனநல மருத்துவர் பரந்தாமன் கூறுகையில், இளம் பருவத்தினரை தேவையற்ற பொருத்தமற்ற கருத்துக்களின் பால் இழுத்து விடுவது அவர்களின் ஆன்மாவை சேதப்படுத்தும் , தீவிர மனநல பிரச்னைக்கும் வழிவகுக்கும் என்றார்.யூ-டியூப் கண்காணிப்பும் அவசியம்.ஓ.டி.டி.,யை போல் யூ-டியூப் ஐ ஒழுங்குபடுத்துவதும் மிகவும் அவசியம். ஏனெனில் இந்த செயலி இலவசமாக கிடைக்கிறது. கோடிக்கணக்கான கணக்காளர்களால் அணுகப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் யூ-டியூப் வய வந்தோர் நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவதில்லை. அத்தனை கருத்துகளும் கணக்காளர்களால் தேடப்படுவை நாங்கள் எதையும் திணிப்பதில்லை என யூ-டி.யூப் கூறுகிறது.வழக்கறிஞர் சுந்தரகாடேஸ்வரன் கூறுகையில், சாதாரணமாக அலைபேசி பயன்படுத்தாக நிலையில் இருந்தாலும் கூகுள் நமது குரலைபதி செய்ய இயலும் . நெருக்கமான உரையாடலை கூட யூ.-டி.யூப் பதிவு செய்து அதற்கேற்றவாறு அபாச படங்களை ஒளிபரப்பக்கூடும்.இதை குழந்தைகள் அணுக வாய்ப்புள்ளது. இந்த அம்சத்திற்காக நீதிமன்றத்தில் யூ.டி.யூப் மேல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றார். பார்வையாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் பெற முன்னணி ஓ.டி.டி., தள நிறுவனங்களை பல முறை அணுகிய போதும் அவர்கள் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.