<div>பாலிவுட்டின் பிரபல சண்டை இயக்குநர் வீரு தேவ்கானின் மகன் அஜெய் தேவ்கான். 1969ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி பிறந்த அஜெய் தேவ்கான், 1991ம் ஆண்டு பூல் அவுர் கான்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த அறிமுக ஹீரோவுக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. அதிலும் ஆக்ஷன் படங்கள் அஜெய்க்கு பெரிய பெரை பெற்று தந்து அவரை முன்னணி ஹீரோவாக்கியது. பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை கஜோலை காதலித்து, 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் இருக்கிறார் அஜய். </div>