சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பேட்டில் - விமர்சனம்

தயாரிப்பு - அர்ஜூன் பிரபாகரன் | இயக்கம் - நாராயணன் பி.ஏ

Published

on

பேட்டில்

பேட்டில்

2 மணி 22 நிமிடங்கள்
★★★★★
★★★★★
2
  • அர்ஜூன் பிரபாகரன்
  • ஆராத்யா
  • ஏப் 24, 2026
  • நாராயணன் பி.ஏ
  • பேட்டில் - வணிக கல்விக்கு எதிராக சண்டைபோட்டு இருக்காங்க. ஆனா, ஜெயிக்கல
தயாரிப்பு: எலைட் டாக்கீஸ்
இயக்கம்: நாராயணன் பி.ஏ
நடிப்பு: அர்ஜூன் பிரபாகரன், ஆராத்யா, சுப்ரமணியம் சிவா, காயத்ரி, சுருளி
ஒளிப்பதிவு: யுவராஜ்
இசை: ஜீவா
வெளியான தேதி: ஏப்ரல் 24, 2025
நேரம்: 2 மணி 22 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

ராப் பாடகரான ஹீரோ அர்ஜூன் பிரபாகரன், தனியார் பள்ளி டீச்சர் ஆராத்யாவை காதலிக்கிறார். அவர்கள் காதலுக்கு ஒரு சிக்கல் வருகிறது. அதேபோல் ஆராத்யாவுக்கும் தான் வேலை பார்க்கும் தனியார் பள்ளி தாளாளர் சுப்ரமணியம் சிவாவால் ஒரு பிரச்னை வருகிறது. இரண்டிலும் சிக்கி ஹீரோ, ஹீரோயின் எப்படி தவிக்கிறார்கள். பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததா? இவர்கள் காதல் ஜெயித்ததா என்பது பேட்டில் படக்கதை.

ராப் பாடகராக ஆக நினைக்கும் ஹீரோவின் வாழ்க்கை, போராட்டம் வெற்றி ஒரு பார்ட்டாக செல்கிறது. ஹீரோயின், ஹீரோயின் காதல், பிரச்னை இன்னொரு பார்ட். இதைவிட முக்கியமாக தனியார் பள்ளியின் அலட்சிய நிர்வாகத்தால், பணம் பறிக்கும் போக்கால் ஆசிரியர்கள், மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கொஞ்சம் வலுவாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர். சொல்லப்போனால் இன்றைய கல்வி, தனியார் மோகம், அதனால் ஏற்படும் சமூக, உளவியில் பிரச்னைகளைதான் படத்தின் கரு.

ராப் பாடகராக வரும் அர்ஜூன் பிரபாகரன் ஹீரோயிசம் இல்லாமல் இயல்பாக நடித்து இருக்கிறார். காதல், சில பாச காட்சிகளில் நடிப்பு ஓகே. ஆனால், முக்கியமான இடங்களில் சொதப்பி, அமைதியாக இருக்கிறார். ராப் பாடல், அது சம்பந்தப்பட்ட சீன்களுக்கும் அவர் உடல்மொழி செட்டாகவில்லை. பட்ஜெட் காரணமாக ராப் போட்டி சீன்களை சிம்பிளாக எடுத்து இருக்கிறார்கள். அது கதையுடன் ஒட்டவில்லை. அதேசமயம் ஹீரோயின் ஆராத்யா காதல் காட்சிகளில் அவர் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

தனியார் பள்ளி டீச்சராக வரும் ஆராத்யா கேரக்டர் அழுத்தமாக இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தின் பணத்தாசையால் சக டீச்சர்கள் பாதிக்கப்பட்ட அவர் பொங்குவது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக குரல் எழுப்புவது, அதனால், உடல், மனரீதியாக பாதிக்கப்படுவது என தனது போர்ஷனை சிறப்பாக செய்து இருக்கிறார். பள்ளி நிர்வாகத்தால் உடல்ரீதியாக துன்புறுத்தப்படும் காட்சியில் உருக்கமாக நடித்து இருக்கிறார்

தனியார் பள்ளி தாளாளராக நடித்துள்ள இயக்குனர் சுப்ரமணியம்சிவா கேரக்டர் ரொம்பவே மிரட்டுகிறது. பள்ளிக்கு எதிராக போராடும் டீச்சரை அவர் அடிப்பது, கடிப்பது ஓவர். கொஞ்சம் சினிமாத்தனத்தை குறைத்து இயல்பாக நடித்து இருக்கலாம். அரசியல்வாதியாக வரும் முனிஸ்காந்த் கேரக்டரிலும் காமெடிதான் இருக்கிறது. சீரியஸ்தனம் இல்லை. ஹீரோ அம்மாவாக வரும் காயத்ரி பாசத்தில் உருகி இருக்கிறார். ஹீரோவுக்கு ராப் பாடகர் வாய்ப்பு வாங்கிதரும் சுருளி கேரக்டரிலும் இயல்பான நடிப்பு இல்லை. இப்படி படத்தில் ஏகப்பட்ட மைனஸ்கள். பாடல்கள், ஒளிப்பதிவு, மற்ற விஷயத்திலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ராப் பாடகர் பின்னணி, வெளிநாட்டு கச்சேரி, அதில் ஏற்படும் சிக்கல் போன்றவற்றிலும் அழுத்தம் இல்லை.

தனியார் பள்ளிகளின் மறுபக்கம். படிப்பு, வீட்டு பிரஷர் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவது ஆகியவற்றை தைரியமாக காண்பித்துஇருக்கிறார் இயக்குனர். அதேபோல், பீஸ் அதிகம் வாங்கிக்கொண்டு மாணவர்கள் படிப்பை புறக்கணிப்பது, டீச்சர்களை பாடாய்படுத்து போன்ற சீன்கள் இயக்குனரின் கல்வி மீதான அக்கறையை, சமூகப்பொறுப்பை காண்பிக்கிறது. அதிக வீட்டுப்பாடம், 10, 12ம் வகுப்புக்கு முக்கியத்துவம், பாஸ் விகிதத்தை அதிகம் காண்பிக்க எடுக்கும் முயற்சிகள். டீச்சர்களின் வேலை பளு என பல விஷயங்களை கதை பேசுகிறது. அது மட்டுமே படத்தின் பிளஸ்.

நல்ல கல்வி கதையை காதல், இசை பின்னணி கலந்து கொடுக்க நினைத்து இருக்கிறார் இயக்குனர். ஆனால் சுமாரான நடிப்பு, மெர்ச்சூடு இல்லாத சீன்களால் படம் தடுமாறி இருக்கிறது. பள்ளி சம்பந்தப்பட்ட சீன்கள் ஓகே. அதிலும் சில இடங்களில் ஓவர் டோஸ். கிளைமாக்சிலும் வலு, தீர்வு இல்லை.

பேட்டில் - வணிக கல்விக்கு எதிராக சண்டைபோட்டு இருக்காங்க. ஆனா, ஜெயிக்கல

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் விமர்சனங்கள்

பேட்ரியாட் (மலையாளம்)

பேட்ரியாட் (மலையாளம்)

தயாரிப்பு : ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனிஇயக்கம் : மகேஷ் நாராயணன்நடிப்பு : மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, பஹத்

கர

கர

தயாரிப்பு : வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்இயக்கம் : விக்னேஷ்ராஜாநடிப்பு : தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார்,

பிரேக்பாஸ்ட்

பிரேக்பாஸ்ட்

தயாரிப்பு: கிரிஜா வரதராஜ்இயக்கம்: ஏ.ஆர்.காந்திகிருஷ்ணாநடிப்பு: ராணவ், ரோஸ்மின், கஸ்துாரி, சம்பத்,

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map