4 நாட்களுக்கு அடித்து ஊற்ற போகுது கனமழை | IMD | Rain | Weather News | Rain Alert
நேற்றுடன் அக்னி வெயில் முடிந்த சூழலில் மழை அறிவிப்புகளை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகள்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்,
மற்றும் மத்தியகிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் தலா ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் எதிரொலியாக நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் திருநெல்வேலி மலை பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.