தமிழகத்தை சேர்ந்த பிரபல கலைஞர்களுக்கு பத்ம விருது: ஜனாதிபதி முர்மு கவுரவிப்பு Padma Awards 2026
கலை, இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பாற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் குடியரசு தினத்தை ஒட்டி இந்த விருதுப் பட்டியல் வெளியிடப்படும்.
அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் 131 பேர் இடம் பெற்றனர். 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அவர்களில் 66 பேருக்கு டில்லி ராஷ்டிரபதி பவனில் இன்று, ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி சிறப்பித்தார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.