சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

தமிழகமே உற்று நோக்கும் வழக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு | Sathankulam | Jayaraj | Fennix

Dinamalar Cinema Logo dinamalarcinema 97,209 views
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார், 2020ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து சென்று விடிய விடிய தாக்கியதில் இருவரும் இறந்தனர். இதை கொலை வழக்காக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ், போலீஸ்காரர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 6ம் தேதி மதுரை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், மதுரை மாவட்ட கோர்ட் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது, கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 9 குற்றவாளிகளுக்கும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. 9 குற்றவாளிகளையும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நீதிபதிகள் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் வாதாட 9 பேரும் வழக்கறிஞர்களை நியமனம் செய்துவிட்டீர்களா? என கேட்டனர். அதற்கு, அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞரை நியமித்துவிடுவோம் என பதிலளித்தனர்.
Advertisement
Advertisement
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map