சிறப்புச்செய்திகள்:

கானம் பாடும் சனா

கானம் பாடும் சனா
Advertisement
எழுத்து அளவு
இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். கருத்த பெண்னே பாடல் மூலம் டிரெண்ட் ஆகி பல தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர். 24, மாறா உள்ளிட்ட படங்களிலும் பிற மொழி படங்களிலும் பாடி இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட சனா மொய்டுட்டி வாசகர்களுக்காக மனம் திறந்தபோது...உங்களை பற்றி ...நான் பிறந்தது கேரளா. வளர்ந்தது மும்பை. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். எப்போது துவங்கியது இந்த இசை பயணம்அம்மா நன்கு பாடுவார். அதனால் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 7 வயதில் மேடையேறி பாடினேன். பின் பள்ளி மேடை, இன்ஜினியரிங் படிக்கும் போது கல்லுாரி மேடை என எனது பயணம் துவங்கியது.கவர்சாங் ஆர்வம் எப்படிசிறுவயதில் பாடும் போது அதை ரெக்கார்ட் செய்து கேட்டு பார்ப்பேன். பல மொழிகளிலும் நிறைய பாடல்கள் கேட்பேன். அப்போதுதான் கவர் சாங் எண்ணம் வந்தது. பழைய பாடல்களை புது மெட்டில் பாடி மக்களை முணுமுணுக்க வைக்க எண்ணினேன்.கருத்த பெண்ணே பாடல் அனுபவம்1994ல் வெளியான "தேன்மாவின் கொம்பத்" எனும் மலையாள படத்தின் பாடல் அது. எளிமையான அந்த பாடலை தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப பாப், இந்துஸ்தானி, கிளாசிக் என கலந்து வெளியிட்டேன். மறக்க முடியாத அனுபவம்2011 முதல் கவர் சாங் செய்து வருகிறேன். அதில் பல பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. இருந்தாலும் கருத்த பெண்னே பாடல் டிரெண்டிங்கில் இருந்தது. மலையாள பாடலாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினர். இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.எந்தெந்த மொழிகளில் பாடுகிறீர்கள்தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி, பஞ்சாபி மொழிகளில் பாடி வருகிறேன்.இசைக் குழு மூலம் என்ன செய்து வருகிறீர்கள்இசை துறையில் இயங்க முடிவெடுத்து இன்ஜினியரிங்க் முடித்த பின் இன்டிபென்டட் மியூசிக் ஆர்ட்டிஸ்ட்டாக எண்ணினேன். அதற்கு குழுவை அமைப்பது கடினமாக இருந்தது. ஆனால் அதில் வென்றேன். இசை குழுவில் அனைவரும் தமிழர்கள். பல மாநிலங்கள், நாடுகளில் மேடை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறோம். சமீபத்தில் துபாய் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினோம்.உங்களது சாதனை என்று கருதுவதுஏ.ஆர்.,ரஹ்மான் இசையில் பாடியது. அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.எதிர்கால திட்டம்நிறைய பாடல்கள் பாட வேண்டும். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும்.
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

நட்சத்திரங்களின் பேட்டி

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

பி.எஸ்சி., படித்த 24 வயதான இளம் நாயகி ப்ரீத்தாவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து இவரது ஸ்டோரிஸ், போஸ்ட், ரீல்ஸ் எப்போது வரும் என காத்திருக்கின்றனர் என்றால்

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

குடும்பம், காதல், ஆக் ஷன் என எந்த வகை படமாக இருந்தாலும் ஜெயித்துக்காட்டி கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் நெருக்கமானவர். முதல் படம் ஜெயம்

Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map