சிறப்புச்செய்திகள்:

இனி பார்ட்டிக்கு இடமில்லை; நடிகர் சிம்பு பளிச்

இனி பார்ட்டிக்கு இடமில்லை; நடிகர் சிம்பு பளிச்
Advertisement
எழுத்து அளவு
ஆட்டம்... ஆட்டம்... ஆட்டம்... இது சிலம்பரசனின் சிலம்பாட்டம் என அதிவேக நடனம், நடிப்பு, காதல், சோகம் என திரையை திருவிழாவாக்கும் தமிழ் சினிமாவின் ஒரே ஹீரோ என ரசிகர்கள் பலர் கொண்டாடும் சிம்பு திரைப் பயணம், மாநாடு படம் குறித்து மனம் திறக்கிறார்...இன்றைய சினிமா உலகம் எப்படி இருக்கிறதுநிறைய மாறியிருக்கு; புதுசா ஏதாவது கொடுத்தாகனும். இது மக்களுக்கு புரியாதுனு முடிவு பண்ண முடியாது. சினிமா மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். இன்டர்நெட் வரும்போது யாருக்கும் புரியலை. இன்று இன்டர்நெட் இல்லாமல் எதுவும் இல்லை.சிம்புவின் மாநாடு கதை பற்றி ஒன்லைன் மக்களுக்கு எளிதாக புரியும், டைம் லுாப் கதை கொண்ட ஒரு கமர்சியல் படம் மாநாடு. சாதாரண பையனா வரும் ஹீரோவுக்கு தன்னை சுற்றி நடப்பது புரியாது. ஒரு மாநாட்டில் சில பிரச்னை நடக்குது. ஹீரோ வில்லனை சுத்த விடுகிறார் என கதை நகர்கிறது.உங்களுக்குள் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம் முன்னாடி எதுக்கும் கவலைப்படாமல் ஜாலியா இருப்பேன். இன்று ஒரு விஷயம் கிடைச்சா அதில் இருந்து 150 விஷயம் எடுக்குறாங்க, அதனால் அமைதியா இருக்க முடிவு பண்ணிருக்கேன். சினிமா தாண்டி எந்த வேலையும் பார்க்குறதில்லை. அலைபேசியை கூட சமீப காலமாக பார்க்குறது இல்லை. இந்த வாழ்க்கை கொஞ்ச நாள் வாழனும்.எத்தனை கிலோ உடல் எடை குறைத்தீர்கள் 25 கிலோ குறைத்தேன்... இரவில் சாப்பிட்டு உடனடி துாங்கும் போது செரிமானம் ஆகாமல் மறு நாள் காலை வரை வயிற்றில் உணவு சுழற்சி நடக்கும். இரவு சாப்பிடாமல் பசியில் துாங்க வேண்டும். அது கஷ்டம் ஆனால் பயிற்சி எடுத்தால் நல்லது. நடை, உடற்பயிற்சி, டென்னிஸ்க்கு நேரம் ஒதுக்கி செய்தேன்.இயக்குனர் வெங்கட் பிரபு குழுவுடன் பார்ட்டிஅவங்க பார்ட்டி பண்ணிருப்பாங்க... நான் எங்கும் போகல. இளம் வயதில் பலர், நண்பர்களுடன் ஜாலியா பார்ட்டி போவாங்க. நடிப்பு, கதை, இயக்கம்னு இருந்ததால் எந்த பழக்கமும் இல்லை. இடையில் கொஞ்சம் நடந்தது... எல்லாம் அந்த வயசு வரை தான். இனி பார்ட்டிக்கு இடமில்லை.அப்பா இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு அப்பா எப்ப கூப்பிட்டாலும் நடிக்க போய்டுவேன். அவர் என் குரு ஆச்சே.இசை வெளியீட்டு விழாவில் ஏன் அழுதீங்க பேசும் வரை ஜாலியா இருந்தேன், பேசும் போது உணர்ச்சிவசப்பட்டேன். என் நிறைய படங்களுக்கு பிரச்னை வந்திருக்கு. மாநாடு ரொம்ப எமோஷனல் படம். படம் இடையில் நின்றது. 2 முறை கொரோனா வந்து ரிலீஸ் தள்ளி போனது. இந்த விஷயங்கள் என்னை அழுத்தியதால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன்.யுவனுக்கும் உங்களுக்குமான கெமிஸ்ட்ரி சில நேரம் முழு பாட்டும் முடிச்சு பின் வேண்டாம் முதலில் இருந்து பண்ணலாம்னு சொல்லுவேன். இதுவரை எந்த கேள்வியும் கேட்காமல் ரொம்ப நல்லா வைத்திருக்கிறார். அதனால் தான் எனக்கு வரும் பொண்ணும் அவரைப்போல் இணக்கமாக அமைந்தால் நல்லா இருக்கும்னு கூறினேன்.உங்க இயக்கத்தில் அடுத்த படம் எப்போது கொரோனா காலத்தில் நிறைய கதைகள் ரெடி பண்ணிட்டேன். கண்டிப்பா இயக்குவேன். அதெல்லாம் அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொன்றாக நடக்கும்.
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

நட்சத்திரங்களின் பேட்டி

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

பி.எஸ்சி., படித்த 24 வயதான இளம் நாயகி ப்ரீத்தாவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து இவரது ஸ்டோரிஸ், போஸ்ட், ரீல்ஸ் எப்போது வரும் என காத்திருக்கின்றனர் என்றால்

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

குடும்பம், காதல், ஆக் ஷன் என எந்த வகை படமாக இருந்தாலும் ஜெயித்துக்காட்டி கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் நெருக்கமானவர். முதல் படம் ஜெயம்

Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map