சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

அருளானந்தபுரம் டூ ஹாலிவுட் ஜெயித்த ஜெர்மி எர்னஸ்ட்

அருளானந்தபுரம் டூ ஹாலிவுட் ஜெயித்த ஜெர்மி எர்னஸ்ட்
Advertisement
எழுத்து அளவு
சில மாதங்களுக்கு முன் ஹாலிவுட்டில் வெளியான "பேட்பாய்ஸ்" படம் படு ஹிட் ஆனது. நடிப்பு, ஒளிப்பதிவுடன் படத்தின் மியூசிக்கும் பரவலாக பேசப்பட்டது. அந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் லோர்ன்பால்ப் குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞரும் இருக்கிறார் என்பது பெருமையளிக்கும் விஷயமில்லையா.கோலிவுட், டோலிவுட்டை அடுத்து பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிலும் சாதிக்க வேண்டும் என்பது இந்திய சினிமா கலைஞர்களின் தீராத ஆசையாக இருக்கிறது. தமிழகத்தை பூர்வீமாக கொண்டு அமெரிக்கா பென்சில்வேனியாவில் பிறந்து வளர்ந்த இந்திய வாலிபர் "பேட் பாய்ஸ்" உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்தவர்களின் குழுவில் இடம் பெற்று சத்தமின்றி சாதித்து வருகிறார். அவர் தான் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே வைகை கரையில் அமைந்த அருளானந்தபுரத்தைச் சேர்ந்த ஜெர்மிஎர்னஸ்ட்.மூன்று வயதில் பியானோ, வயலின் இசைக் கலைஞராக வாழ்க்கையை துவக்கினார். மியூசிக் தான் வாழ்க்கை என சிறு வயதிலேயே முடிவு செய்து விட்ட ஜெர்மியின் ஆசைக்கு பெற்றோரும் தடை போடவில்லை. பால்டிமோர், கலிபோர்னியாவில் மியூசிக்கில் இளங்கலை, முதுகலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். படிக்கும் காலத்திலேயே பகுதி நேரமாகவும், தன்னார்வத்தாலும் ஆர்க்கெஸ்ட்ராக்களில் இணைந்து அமெரிக்கா முழுதும் சென்று இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்றிருக்கிறார். பள்ளி, கல்லுாரி இசைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் இவரது திறமையை கண்டு வியப்புற்ற கல்லுாரி பேராசிரியர் ஒருவர் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் லார்ன் பால்ப்பிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அவர் ஜெர்மியை "ஆர்கில்" என்ற ஹாலிவுட் படத்தில் கூடுதல் மியூசிக் கம்போஸராக அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே மிஷன் இம்பாசிபிள் பாலென்ட் என்ற படத்தில் இசை அமைத்ததற்காக கொண்டாடப்பட்டவர் லார்ன் பால்ப். அவரது ஆர்கில் படம் ஜெர்மிக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. அதையடுத்து தி வார் பிட்வின் தி லேண்ட் அண்ட் தி சீ, மேன் வெர்சஸ் பேபி, தி கேம் அவார்ட்ஸ் 2025, தி நாக்ட் கன், மிஸின் இம்பாசிபிள், நோவேகெயின், வி ஆர் ஸ்டோரர், ஹில், ஸகேமைக்கேல், கேரிஆன், டிகோடட், பேவெர்லி ஹில்ஸ் கூப் என 15 க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்தவர்களின் இசைக்குழுக்களில் மியூசிக் கம்போஸராக பணிபுரிந்தார்.ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பூர்விக கிராமமான அருளானந்தபுரத்திற்கு வந்தவருடன் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்...அப்பா ஜோசப் மென்பொறியாளர். அவர் வேலைக்காக அமெரிக்கா பென்சில்வேனியாவில் முப்பதாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தார். நான் பிறந்தது பென்சில்வேனியாவில் தான். அப்பா இசைஞானம் கொண்டவர். அடிக்கடி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை வீட்டில் பாடிக் கொண்டிருப்பார். குடும்ப, நண்பர் விழாக்களிலும் அவர் பாடுவதுண்டு. இதனால் இயற்கையாகவே இசை மீது ஆர்வம் பிறந்தது.மூன்று வயதிலேயே என்னை அம்மா ராஜி பியானோ, வயலின் வகுப்பில் சேர்த்து விட்டார். கல்லுாரியில் படிக்கும் காலத்திலேயே ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்ந்து 150க்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளில் இசைக்குழுவினருடன் இணைந்து பியோனோ, வயலின், கிடார், சாக்ஸ்போன் வாசித்தேன். பாடகர்கள் ஜேசுதாஸ், சித்ரா போன்றோர் கச்சேரிகளில் இசைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.கடந்த ஐந்தாண்டுகளில் 15க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்திருக்கிறேன்.ஹாலிவுட் இசையமைப்பாளர்கள் ஹான்ஸ்சிம்மர், லாட்விக் கோரரான்ஜோம் ரொம்ப பிடிக்கும். மியூசிக்காகவே ஹாரிபாட்டர் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.இந்திய இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும். அவர்கள் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களை கேட்பேன். ஸ்ரேயாகோஷல் பாட்டும் ரொம்ப பிடிக்கும். ஹாலிவுட் பாடகர் ஸ்டீவ்வுண்டர் பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பூர்விக கிராமத்திற்கு பெற்றோருடன் வருவதுண்டு. எந்த சத்தமுமின்றி தென்றல் தீண்டும் அமைதியான அருளானந்தபுரத்திற்கு வருவது ஒரு உற்சாக டானிக் எடுத்து கொண்ட பலன் தரும்.என்னை பொறுத்தவரையில் மியூசிக் என்பது எமோஷன், கனெக் ஷன். எல்லோரும் ஒன்றாக இணைந்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வைப்பதில் இசைக்கு முக்கியத்துவம் உண்டு.எதிர்காலத்தில் சிறந்த ஹாலிவுட் மியூசிக் கம்போஸராக வேண்டும். மற்ற கலைஞர்களை போல ஆஸ்கர் விருது மீது ஒரு கண் உள்ளது. அந்த விருதை பெற வேண்டும் அல்லது இசைக்காக அந்த விருது பெறும் பட இசைக் குழுவிலாவது இடம் பெற்று விட வேண்டும். இது தான் என் ஆசை என்றார் உற்சாகமாக.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்


மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்


எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map