சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

வித்தியாச சிரிப்பு... ஜெய்யின் மேனரிசம்... : சுப்ரமணியபுரம் குறித்து சசிகுமார் கூறிய புதிய தகவல்

வித்தியாச சிரிப்பு... ஜெய்யின் மேனரிசம்... : சுப்ரமணியபுரம் குறித்து சசிகுமார் கூறிய புதிய தகவல்
Advertisement
எழுத்து அளவு
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இரண்டு தளங்களிலும் ஒன்றாக கால் பதித்து இரண்டிலுமே வெற்றி பெற்றார். ஆனாலும் அதைத்தொடர்ந்து டைரக்ஷன் பக்கம் போகாமல் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சசிகுமாரிடம் அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.அப்போது பேசிய சசிகுமார், அது உண்மையிலேயே தான் சிரித்த சிரிப்பு அல்ல என்றும் அந்த படத்தின் டப்பிங்கின் போது நகைச்சுவை நடிகராக நமோ நாராயணனை தனக்கு பதிலாக சிரிக்க வைத்து டப்பிங்கில் சேர்த்துக் கொண்டதாகவும், ஆனால் இப்போது வரை அதை தனது சிரிப்பாக நினைத்து பலரும் மிமிக்ரி பண்ணி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.அது மட்டுமல்ல அந்தப் படத்தில் ஜெய் ஸ்டைலாக தலையை கொதி விடுவது இயல்பிலேயே தன்னுடைய மேனரிசமாக இருந்தது என்றும் சுப்ரமணியபுரம் படத்தில் அந்த ஸ்டைலை ஜெய்க்கு கற்றுக் கொடுத்ததாகவும் கூறிய சசிகுமார் அதன்பிறகு சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தபோது அதேபோன்று தானும் ஸ்டைலாக தலையை கோதியபோது இயக்குனர் தன்னிடம் சார் இது ஜெய் ஸ்டைல் போல இருக்கிறது, வேறு மாதிரி செய்யுங்கள் கூறினாராம். இப்படி தன்னுடைய ஸ்டைல் ஒன்று ஜெய்க்கு கை மாறியது குறித்து இன்னொரு புதிய தகவலையும் குறிப்பிட்டுள்ளார் சசிகுமார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

மார்ச் மாத மூன்றாவது வார தொடக்கமான இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளலாம். காசர்கோடு எம்பஸிமலையாள இயக்குநர் ஆதிஷ் எம் நாயர்

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் வர்த்தக ரீதியிலான அதிக வெற்றித் திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களில் குறிப்பிடும்படியான ஒருவர் என்றால் அது இயக்குநர் ப நீலகண்டன் என்பது அனைவரும்

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக புதுப்புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி மீடியம் பட்ஜெட்டில் வெற்றி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map