சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

என் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் படமாக தேவரா இருக்கும் : ஜூனியர் என்டிஆர்

என் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் படமாக தேவரா இருக்கும் : ஜூனியர் என்டிஆர்
Advertisement
எழுத்து அளவு
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் "தேவரா". கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடங்களில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோ நடிக்கின்றனர். இந்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ரிலீஸுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள டில்லு ஸ்கொயர் படத்தின் சக்சஸ் மீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ஜூனியர் என்டிஆர். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, தேவரா படம் குறித்து ஒரு தகவலையும் வெளியிட்டார்.அங்கிருக்கும் ரசிகர்களை பார்த்து, “தேவரா திரைப்படம் வெளியாக சில நாட்கள் கால தாமதம் ஆனாலும் கூட, அந்த படம் வெளியாகும்போது என் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் விதமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு எல்லா விஷயத்திலும் கடின உழைப்பை கொடுத்து வருகிறோம்” என்று கூற அரங்கில் அமர்ந்த ரசிகர்களின் கைதட்டல் அடங்க இரண்டு நிமிடமானது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

மார்ச் மாத மூன்றாவது வார தொடக்கமான இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளலாம். காசர்கோடு எம்பஸிமலையாள இயக்குநர் ஆதிஷ் எம் நாயர்

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் வர்த்தக ரீதியிலான அதிக வெற்றித் திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களில் குறிப்பிடும்படியான ஒருவர் என்றால் அது இயக்குநர் ப நீலகண்டன் என்பது அனைவரும்

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக புதுப்புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி மீடியம் பட்ஜெட்டில் வெற்றி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map