சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வதில்லை : ஜேடி சக்கரவர்த்தி

நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வதில்லை : ஜேடி சக்கரவர்த்தி
Advertisement
எழுத்து அளவு
நாகார்ஜுனா நடிப்பில் வெளியான உதயம் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ஜேடி சக்கரவர்த்தி. அதன்பிறகு இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் சில படங்களில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் மாறி மாறி நடித்தார். தற்போது சில முக்கிய கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வது கிடையாது, சூழ்நிலை சிலநேரம் அவர்களை அப்படி ஒரு இக்கட்டில் தள்ளுகிறது என்று கூறி தான் நிஜத்தில் சந்தித்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.அவர் கூறும்போது, “பல வருடங்களுக்கு முன் நானும் நடிகர் சுரேஷும் அப்போது பிரபலமாக இருந்த நடிகை ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றோம். அந்த சமயத்தில் திடீரென அங்கே எதிர்பாராமல் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவர் உள்ளே வந்தார். உடனே அந்த நடிகை எங்கள் இருவரையும் அந்த அறையில் இருந்த கட்டிலின் கீழ் மறைந்து கொள்ள சொன்னார். வந்த தயாரிப்பாளர் நடிகையிடம் கோபாவேஷமாக பேசியதுடன் கேட்கவே கூசும் சில அநாகரிக வார்த்தைகளையும் பேசினார்.அவர் சென்றபிறகு நாங்கள் வெளியே வந்தபோது அந்த நடிகை இந்த சம்பவத்தால் உடைந்து போய் அழுவார் என நினைத்தால் அவர் சிரித்துக் கொண்டே, இது பழகிவிட்டது. என்ன செய்வது, அவர் மிகப்பெரிய தயாரிப்பாளர்.... ஒரு பக்கம் வாய்ப்புகள் தேவைப்படுகிறது.. இன்னொரு பக்கம் அவரை பகைத்துக் கொண்டு இந்த துறையில் எதுவும் செய்ய முடியாது என்று விரத்தியுடன் சொன்னார். சினிமாவில் சில நடிகைகள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டம் இப்படித்தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

நடிகைகளுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியுமா...? பார்வதி கேள்வி

நடிகைகளுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியுமா...? பார்வதி கேள்வி

தமிழில் சசி இயக்கிய பூ என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன்பிறகு சென்னையில் ஒரு நாள், மரியான் , பெங்களூர் நாட்கள், தங்கலான் என பல படங்களில் நடித்தார். தற்போது


கார்த்தியை இயக்கும் கல்யாண சங்கர்

கார்த்தியை இயக்கும் கல்யாண சங்கர்

தமிழில் டானாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. 1960 காலகட்ட கதையில் இப்படம் உருவாகிறது. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்


சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஓட்டல் தொடங்கினாரா டான்ஸர் ஜப்பான் குமார்

சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஓட்டல் தொடங்கினாரா டான்ஸர் ஜப்பான் குமார்

தமிழ், தெலுங்கு சினிமாவில் ராஜூசுந்தரம், பிரபுதேவா டான்ஸ் குழுவின் பல ஆண்டுகளாக டான்ஸ் ஆடுபவர் ஜப்பான் என்கிற குமார். இவர் காமெடி கலந்து டான்ஸ ஆடும் ஸ்டைல் பிரபலம். சில படங்களில்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map