ஓடிடியில் வெளியான பொன்னியின் செல்வன் 2

ஓடிடியில் வெளியான பொன்னியின் செல்வன் 2
Advertisement
எழுத்து அளவு

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 28ம் தேதி, ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியான படம் "பொன்னியின் செல்வன் 2".

இப்படம் பணம் செலுத்திப் பார்க்கும் முறையில் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. எச்டி தரத்தில் படத்தைப் பார்க்க ரூ.399 கட்டணம். படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடி தளத்தில் படம் கட்டண முறையில் மட்டுமே பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தக் கட்டணம் நீக்கப்பட்டு, பின் சந்தாதாரர்கள் மட்டும் கட்டணமில்லாமல் பார்க்க முடியும்.

"பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகம் வெளியான போதும் இதே முறையில்தான் வெளியானது. முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்தை நிறைய பேர் தியேட்டர்களில் சென்று பார்க்கவில்லை. அதனால் இரண்டாம் பாகத்தின் வசூல் 300 கோடிக்கும் சற்றே கூடுதலாக மட்டுமே வசூலித்துள்ளது. முதல் பாக வசூல் 500 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. எனவே, இரண்டாம் பாகத்தை ஓடிடி தளத்தில் பலரும் பார்க்க வாய்ப்புள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map