கோடை வந்துவிட்டது... படங்கள்தான் இல்லை...
எழுத்து
அளவு
கோடை விடுமுறை தொடங்கி விட்டது. லீவு, நண்பர்களுடன் ஊர் சுற்றல், உறவினர் வீடுகளுக்கு பயணம், வெயில் தாக்கம் என பல காரணங்களால் இந்த சீசனில் தியேட்டருக்கு வரும் கூட்டம் அதிகரிக்கும். ஆனால், இந்தமுறை அதற்கான படங்கள் இல்லை. அது பெரிய குறை என்று கூறப்படுகிறது. நேற்று தனுஷ் நடித்த "கர" வந்துள்ளது. அந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இன்று அஜித்தின் "பில்லா" ரீ ரிலீஸ் ஆகிறது. மே 8ம் தேதி ரத்னகுமார் இயக்கத்தில் விது, பிரீத்தி அஸ்ரானி நடித்த "29" படம் வருகிறது. இது காதல் படம் என்றாலும், புதுமுகங்கள் நடித்து இருப்பது மைனஸ். மே 14ல் சூர்யாவின் "கருப்பு" வருகிறது. அடுத்து பெரிய படங்கள் இல்லை. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் "நுாறுசாமி" எப்போது ரிலீஸ் என தெரியவில்லை. "டிமாண்டிகாலனி 3" படமும் இன்னமும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. கங்கை அமரன், ரோஜா நடிக்கும் "லெனின் பாண்டியன்", விஷ்ணு விஷால் நடிக்கும் "இரண்டு வானம்" படங்களும் கோடையில் வருமா எனத் தெரியவில்லை. விஜய் நடித்த "ஜனநாயகன்" வந்தால் தங்களுக்கு தியேட்டர் கிடைக்காது என்று இந்த படங்கள் தயங்குகின்றன. ஜூன் 4ம் தேதி வர வேண்டிய "டாக்சிக்" தள்ளிப்போய்விட்டது. மற்றபடி பெரிய நடிகர்கள் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்கள் வரவில்லை. ரஜினி, கமல், அஜித், விஜய் சேதுபதி, விக்ரம், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்கள் கோடைக்கு வரவில்லை.
கோலிவுட் செய்திகள்
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் நல்லடக்கம் சற்று முன் நடைபெற்றது. அவருடைய
2026ம் ஆண்டு தமிழ் சினிமா இன்னும் ஒரு மகத்தான வெற்றியை நோக்கிப் பயணிக்காமல் தடுமாறி வருகிறது. எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறவில்லை. மாறாக, “தாய் கிழவி,






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.