வீஜேவாக களமிறங்கும் அர்ச்சனாவின் மகள்
எழுத்து
அளவு
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினி அர்ச்சனா, தனது மகள் ஸாராவை சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமில்லாமல் அர்ச்சனா அவரது மகளுடன் சேர்ந்து நடத்தி வரும் யூ-டியூப் சேனலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அர்ச்சனாவும், ஸாராவும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் ஸாராவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், அர்ச்சனா தனது மகள் ஸாராவுடன் சேர்ந்து விஜய் டிவியில் பிரபல ஷோ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸாரா தனது அம்மாவை போல சிறப்பான தொகுப்பாளினியாக வருவதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் அதவேளையில், அம்மா மகள் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மிக விரைவில் நிகழ்ச்சி பற்றிய மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.