5 மொழிகளில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல்
இயக்குநர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்கு பின் "எதிர்நீச்சல்" தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அதிரடியான கம்பேக் கொடுத்துள்ளார். கதையின் நேர்த்தி, காட்சி வடிவமைப்பு, வசனம் என அனைத்திலும் டாப் மதிப்பெண்களை ஸ்கோர் செய்து வரும் "எதிர்நீச்சல்" தொடர் இளைஞர் முதல் முதியவர் வரை ஆண் பெண் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பிடித்த தொடராய் மாறியுள்ளது. அதிலும், அதகளமான எபிசோடுகளால் சமீப காலங்களில் டாப் டிஆர்பியை பிடித்து வருகிறது. இத்தகைய வெற்றியை பெற்றுள்ள இந்த தொடர் பிற மொழி சேனல்களில் ரீமேக் செய்யப்பட்டு தெலுங்கில் "உப்பென்னா", மலையாளத்தில் "கனல் பூவு", கன்னடத்தில் "ஜனனி", பெங்காலியில் "அலோர் தீக்கனா", மராத்தியில் "சபாஷ் சன்னை" ஆகிய பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக தமிழ் தொடர்களில் "கயல்", "சுந்தரி" உள்ளிட்ட சில தொடர்களும் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்தாலும், எதிர்நீச்சல் தொடர் மட்டுமே 5 மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.