சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

மாரிமுத்துவுக்காக டப்பிங் பேச பயந்தேன்

மாரிமுத்துவுக்காக டப்பிங் பேச பயந்தேன்
Advertisement
எழுத்து அளவு
எதிர்நீச்சல் தொடரின் முக்கிய நடிகரான மாரிமுத்துவின் இழப்பு ரசிகர்கள் பலரையும் சோகமடைய செய்துள்ளது. எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாரிமுத்து நடித்த காட்சிகளில் அவருக்கு பதிலாக வேறொரு நபரை டப்பிங் பேச வைத்தனர். ஆனால், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கார்டூன் குரல் போல் இருப்பதாக கிண்டலடித்தனர். இந்நிலையில், மாரிமுத்துவுக்காக டப்பிங் பேசிய வெங்கட் ஜனா மாரிமுத்துவுக்காக டப்பிங் பேச ரொம்பவே பயந்ததாக கூறியுள்ளார். அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், "மாரிமுத்து சார் அவர் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் தான் முதன் முதலில் என்னை டப்பிங் பேச வைத்தார். இப்போது அவருக்காக டப்பிங் பேச வேண்டிய நிலைமை வந்துவிட்டது. மாரிமுத்து போலவே ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது. ரொம்பவே பயந்தேன். காரணம் குணசேகரன் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்கான கேரக்டர். அதில் நான் பேசி எதுவும் சொதப்பி விடக்கூடாது என பயந்தேன். அதன்பிறகு இயக்குநர் திருச்செல்வம் கொடுத்த தைரியத்தால் தான் பேசினேன். மாரிமுத்து விட்டு போனதை நான் முடித்து வைத்ததை போன்று ஒரு சின்ன நிம்மதி இருக்கிறது. இதுவே நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்


நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map