நான் ஏமாந்துட்டேன் : பப்லு பிருத்விராஜ்
எழுத்து
அளவு
பிரபல நடிகரான பிருத்விராஜ் என்கிற பப்லு பல வருடங்களாக சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் ஜோடியாக பல பேட்டிகளில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர். இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிருத்விராஜ், "நான் எப்போதும் வெளிப்படையா இருப்பேன். நீங்க கிண்டல் பண்ணுவீங்கன்னு நான் உண்மைய சொல்ல தயங்கல. நான் ஒரு விஷயத்த சொன்னா ஒரு 10 பேர் நல்ல விதமா எடுத்துக்கிறாங்க, 10 பேர் கழுவி ஊத்துவாங்க. அதனால எனக்கும் ஷீத்தலுக்கும் இருக்கும் பிரச்னையை வெளிப்படையாக பேச விரும்பல. நான் நிறைய ஏமாந்துட்டேன். இப்ப சரியான பாதையில போய்ட்டு இருக்கேன். இனி என்னை மட்டுமே கவனிக்க போறேன். இனியும் திருந்தலைன்னா நான் முட்டாள்" என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.