அட்ஜெஸ்மென்ட் குறித்து மனம் திறக்கும் ‛கேபிஒய் சசிகலா
எழுத்து
அளவு
சின்னத்திரை, சினிமா என அனைத்திலும் பிரபலமான லேடி காமெடியனாக வலம் வர தொடங்கியுள்ள அறந்தாங்கி நிஷா, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார். அதில், பழைய ஜோக்குகளையே வேற மாதிரி சொல்லி கைத்தட்டல்களை பெற்ற நிஷாவை அப்போதே பலரும் மொக்கை ப்ளேடு என கிண்டல் செய்து வந்தனர். அதே சீசனில் அறிமுகமான சசிகலா கொஞ்சம் புதிதாக ஜோக்குகளை சொல்லி ஓரளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும், சசிகலா திடீரென நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் பட்டிமன்ற பேச்சாளராகவும், சில மேடைகளில் நடுவராகவும் சசிகலா மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அறந்தாங்கி நிஷா பழைய ஜோக்குகளை தான் சொல்வார். நானும் பழனியும் புது ஜோக்குளை சொல்லி ரசிகர்கள் பாராட்டுகளை பெற்ற போதிலும் எங்களை நிகழ்ச்சியிலிருந்து திடீரென நீக்கிவிட்டனர். எங்களை ஏன் நீக்கினார்கள் என்ற காரணத்தை இப்போது வரை சொல்லவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், "சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிலர் என்னிடம் அட்ஜெஸ்மெண்ட் செய்ய சொல்லி கேட்டனர். அதுபோன்று கேட்பவர்களிடம் படுத்து தான் உன் படத்துல நடிக்கனுமா?" என்று தைரியமாக பதிலடி கொடுத்து பல படங்களை நிராகரித்துவிட்டதாக சசிகலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.