திருமணம் பற்றிய கேள்வி : வனிதாவின் நக்கல் பதில்

திருமணம் பற்றிய கேள்வி : வனிதாவின் நக்கல் பதில்
Advertisement
எழுத்து அளவு

நடிகை வனிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அனல் காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக்கப் டிராப் என வரிசையாக பல படங்கள் வெளி வர உள்ளது. இந்நிலையில், அண்மையில் வனிதா அளித்த பேட்டியில் தனது மூன்றாவது திருமணம் பற்றி பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பேட்டியின் போது வனிதாவிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு வனிதா, "நான் சட்டப்படி இரண்டு திருமணம் தான் செஞ்சிருக்கேன். மூன்றாவது திருமணம் கண்டிப்பா பண்ணுவேன்" என்று நக்கலாக கூறினார். மேலும் மாப்பிள்ளையின் நிறம் குறித்து கேள்வி கேட்க, அதற்கு வனிதா குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டுமென சிரிக்காமல் நக்கலாக பதிலளித்ததுடன் அனைத்து பேட்டிகளிலும் என்னிடம் திருமணம் பற்றி மட்டுமே கேள்வி கேட்கிறார்கள் என்று காட்டமாகவும் பேசியுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map