சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் குயிலி
எழுத்து
அளவு
சினிமா நடிகையான குயிலி சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்கிற தொடரில் நடித்திருந்தார். அந்த தொடருக்கு பின் குயிலி சின்னத்திரையில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இம்முறை சீரியலில் நடிகையாக இல்லாமல் புதியதாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு "வாழ்ந்து காட்டுவோம்" என பெயர் வைத்துள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பான "சொல்வதெல்லாம் உண்மை" பாணியில் தயாராகி வரும் இந்நிகழ்ச்சியில் பிரச்னைகளுக்கு தீர்வளிக்க அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.