மீண்டும் களமிறங்கும் சிபு சூரியன்
எழுத்து
அளவு
சின்னத்திரையில் ‛ரோஜா" தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிபு சூரியன். அந்த தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இவர், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 தொடரில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த தொடர் சிபு சூரியனுக்கு வெற்றியை தரவில்லை. பாதியிலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜீ தமிழில் வீரா என்கிற தொடரில் சிபு சூரியன் நடிக்க, அந்த தொடரிலும் அவரது கதாபாத்திரம் வெறும் கெஸ்ட் ரோலாகவே சுருக்கப்பட்டது. இந்நிலையில், சிபு சூரியன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ரோஜா தொடருக்கு பின் நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிபு சூரியனுக்கு இந்த புதிய தொடராவது பிரேக் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.