ஹிட் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் ஸ்ரீநிதி

ஹிட் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் ஸ்ரீநிதி
Advertisement
எழுத்து அளவு

விஜய் டிவியின் "செந்தூரப்பூவே" தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியானார் ஸ்ரீநிதி. நன்றாக சென்று கொண்டிருந்த அந்த தொடரானது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக முதலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஒளிபரப்பாக ஆரம்பித்த போது மக்கள் மத்தியில் அந்த தொடருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த சீரியல் முடித்து வைக்கப்பட்டது. அதேசமயம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்த ஸ்ரீநிதிக்கு விஜய் டிவியிலேயே புதிய சீரியலில் வாய்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குபிறகு வந்த புது சீரியல்களில் கூட வேறு ஹீரோயின்களே கமிட்டாகியிருந்தனர்.

இந்நிலையில் தான் ஸ்ரீநிதி ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு தாவினார். இப்போது அந்த சேனலின் பிரபல நடன நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஸ்ரீநிதி தற்போது அதே சேனலில் மிக விரைவில் வெளியாகவுள்ள "தெய்வம் தந்த பூவே" தொடரின் சீசன் 2 வில் ஹீரோயினாக நடிக்கிறார். முன்னதாக முதல் சீசனில் நிஷ்மா செங்கப்பா ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map