நிலைமை சரியாகும் வரை இது தான் திட்டம் | Air India | Indigo | Flight operation | Fuel Costs | DGCA
நிலைமை சரியாகும் வரை இது தான் திட்டம் | Air India | Indigo | Flight operation | Fuel Costs | DGCA
ஏர் இந்தியா நிறுவனம் வாரத்துக்கு 4,400 விமானங்களை இயக்கி வருகிறது.
இதில் 3,600 உள்நாட்டு விமானங்களும், 800 சர்வதேச விமானங்களும் அடங்கும்.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உள்நாட்டு விமான சேவையை 22 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
ஈரான் போருக்கு பின் 80 முதல் 140 சதவீதம் வரை விமான எரிபொருள் விலை உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.
இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை:
எரிபொருள் விலை உயர்வு காரணமாக குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது லாபகரமாக இல்லை.
விலை சீராகும்போது மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே முன்பதிவு செய்த பயணியருக்கு மாற்று விமானங்களில் இடம் ஒதுக்கி தரப்படும்.
முழு பணத்தை திருப்பித் தருதல் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதே போல உள்நாடு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் தினமும் 2 ஆயிரத்து 200க்கு அதிகமான விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது
இண்டிகோவும் முக்கிய வழித்தடங்களில் 7 சதவீத விமான சேவைகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.