முதல்வர் விஜய்க்கு கடல் கடந்து வந்த வாழ்த்து செய்தி |CM Vijay|Malaysia PM Wishes |Anwar Ibrahim
தமிழக முதல்வர் விஜய்க்கு, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் போனில் வாழ்த்து கூறியுள்ளார்.
அவரது பதிவில், தமிழக மக்கள் மீது முதல்வர் விஜய் வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பிரதமர் மோடியை சந்திப்பதற்காகவும் செப்டம்பர் மாதம் இந்தியா வர உள்ளேன்.
அந்த சமயம் வாய்ப்பு கிடைத்தால் தமிழகம் வந்து சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளேன்.
மக்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும், முதல்வர் விஜய் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்தி ஆட்சி செய்வதற்கான வலிமையையும், ஞானத்தையும் பெறட்டும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.