நீட் வினாத்தாள் கசியவிட்ட கோச்சிங் சென்டர் நிறுவனர் கைது |NeetExam|NeetPaperLeak
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக தகவல் வெளியானதை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மே 3ல் நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அடுத்த மாதம் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், மகாராஷ்டிராவை சேர்ந்த வேதியியல், தாவரவியல் ஆசிரியர்கள் கைது செய்தனர்.
வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த அவர்கள், தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களிடம் பணம் பெற்று, வினாத்தாளை முன்கூட்டியே கசியவிட்டது விசாரணையில் தெரிந்தது.
அந்த வகையில், மகாராஷ்டிராவின், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் கைதான நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தவகல்கள் வெளியாகின.
மகாராஷ்டிராவின் லத்துாரை செயல்படும் ரேணுகாய் பயிற்சி வகுப்பில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவராஜ் ரகுநாத் மோடேகோன்கர், நீட் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே, வினாத்தாளை கசியவிட்டது தெரிய வந்தது.
வினா, விடைகளை கையால் பேப்பரில் எழுதி, அதை மாணவர்களிடம் பகிர்ந்து, பின் அதற்கான தடையத்தை முற்றிலும் அழித்ததும் தெரிய வந்தது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.