குவாரி குத்தகைதாரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை | Quarry Raid | TK Prabhu | CM Vijay
தமிழகம் முழுவதும் 2000க்கு மேற்பட்ட கல்குவாரிகளுக்கு கனிம வளத்துறை அனுமதி அளித்துள்ளது.
இங்கு விதிமீறி கற்கள் வெட்டப்படுவதாக புகார் எழுந்ததால், ஆய்வு நடவடிக்கை எடுக்க அமைச்சர் பிரபு உத்தரவிட்டார்.
431 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இதில், 67 குவாரிகளின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 88 குவாரிகளில் பணிகள் நிறுத்தப்பட்டன.
கடந்த 1 மாதத்தில் தமிழகம் முழுவதும் நடந்த ஆய்வில், 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்படுவது கண்டறியப்பட்டது. கனிமவளம் கடத்திய 469 வாகனங்கள் மீது அபராதம் மற்றும் குற்றவியல் டவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விதிமுறைகளை மீறும் குவாரி குத்தகைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.