தவெகவில் விஜயபாஸ்கர் சேர்ந்தால் என்ன ஆகும்? கட்சிக்குள் திடீர் பீதி | Vijayabaskar Political Opposit
அ.தி.மு.க அதிருப்தி அணியில் இருந்து, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, த.வெ.க.,வில் ஐக்கியமாக, விராலிமலை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இவர் அமைச்சராக இருந்தவர். ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் கட்சியில் சேர்க்க தவெக தலைமை தயக்கம் கடட்டுகிறது.
இதுகுறித்து, த.வெ.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது,
அ.தி.மு.க.,வில் நிலவிய குழப்பத்தால், எங்கள் கட்சியில் இணைய, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா வாயிலாக விஜயபாஸ்கர் முட்டிமோதி வருகிறார்.
ஆனால், விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்த நிலையில், அவரை நம் கட்சியில் இணைத்தால், அவரது ஊழல் வழக்கு மூட்டையை நாமும் சுமக்க வேண்டியது வரும்.
கேரளாவில் நடக்கும் முக்கியமான வழக்கிலும், சி.பி.ஐ., வளையத்தில் விஜயபாஸ்கர் இருக்கிறார்.
இந்தநிலையில், அவரை நம் கட்சியில் சேர்த்து, டில்லியின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம்.
விஜயபாஸ்கரை சேர்த்தால் சேதாரம் தானே தவிர, வேறு எவ்வித பயனும் நமக்கு இல்லை என, விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் அழுத்தம் கொடுக்கின்றன.
குறிப்பாக, துாயசக்தி என அரசியல் செய்யும் த.வெ.க.,வுக்கு, மக்கள் மத்தியில் பின்னடைவு ஏற்படும் என, கட்சிக்குள்ளும் அழுத்தம் அதிகரித்து உள்ளது.
எனவே தான், நான்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை உடனடியாக கட்சியில் இணைத்த த.வெ.க., தலைமை, விஜயபாஸ்கர் விஷயத்தில் மிகவும் யோசிக்கிறது.
ஆனால், அமைச்சர்கள் வழியாக கட்சிக்குள் வர, விஜயபாஸ்கர் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக உள்ளதாக உறுதியும் அளித்துள்ளார்.
இதனால், அவரை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
#CVijayabaskar
#AIADMKPolitics
#Dinamalar
#TamilNaduPolitics
#TNPolitics
#PoliticalInternalConflict
#BreakingNewsTN
#AIADMKNews
#TNGovernment
#PoliticalUpdates
#EPSvsVijayabaskar
#LatestNewsTamil
#PoliticalRumors
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.