மூன்று மொழிகளில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல்!
சின்னத்திரை இயக்குநர் திருசெல்வம் நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கிறார். பெண் ஆளுமையை பறைசாற்றும் வகையில் முன்னதாக இவர் இயக்கியிருந்த "கோலங்கள்" சீரியல் சூப்பர் ஹிட்டானது. தற்போது அதே கான்செப்ட்டில் "எதிர்நீச்சல்" என்ற தொடரை இயக்கி வருகிறார். இல்லத்தரசிகளை தாண்டி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கில் "உப்பென்னா" என்ற பெயரிலும் மலையாளத்தில் "கனல்பூவு" என்ற ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், மிக விரைவில் கன்னடத்திலும், வங்காள மொழியிலும் எதிர்நீச்சல் சீரியல் ரீமேக் செய்யப்பட உள்ளது. கயல் சீரியலுக்கு அடுத்தப்படியாக "எதிர்நீச்சல்" தான் அதிக மொழிகளில் ரீமேக் ஆகும் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.