ஜூலியின் வருத்தம்
எழுத்து
அளவு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களில் பிரபலமான போட்டியாளர்களை வைத்து ஆரம்பம் முதலே அசத்தாலாக தொடங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சியில் "உங்களுக்கென்ன வேலை" என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில் பேசிய ஜூலி, "பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன், ஒரு தொண்டு நிறுவனத்தில் இருக்கும் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 23 லட்சம் பணம் தேவைப்படுவதாக தெரிய வந்தது. நான் நண்பர்கள் மற்றும் சோஷியல் மீடியா உதவியுடன் அக்குழந்தையின் மருத்துவ செலவுக்கான பணத்தை சேகரித்து கொடுத்தேன். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது. இந்த விஷயத்தை இன்று வரை நான் யாரிடமும் சொன்னதில்லை. எங்களுக்கு சொந்தவீடு கூட கிடையாது. இருப்பினும் இது போன்ற சமூக தொண்டாற்றுவது மனதிற்கு நெகிழ்வை தருகிறது" என கூறியுள்ளார்.மேலும், "ஒருவர் செய்யும் நல்ல செயல் வெளியே வராது. ஆனால், அவர்கள் செய்யும் சிறு தவறு கூட வைரலாக பரவி, சமூகத்தில் அவரை கேலிக்கூத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது" எனவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரமங்கை, போராளி என பெயரெடுத்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொய்யாக நடித்ததால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் இன்று வரை ஜூலியை சோஷியல் மீடியாவில் நெட்டீசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.