சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

மீண்டும் குக் வித் கோமாளியில் புகழ்

மீண்டும் குக் வித் கோமாளியில் புகழ்
Advertisement
எழுத்து அளவு
விஜய் டிவியின் முக்கிய ஹிட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 ரசிகர்களின் அமோக வரவேற்புடன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களில் தனது நகைச்சுவையால் மக்களின் மனதில் கொள்ளை கொண்ட புகழ் படங்களில் நடித்து வந்ததால், சீசன் 3-யில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் புகழ் வரும் புரோமோ சமீபத்தில் வெளியானது. அதில், கேஜிஎப் ஹீரோ போல் மாஸ் என்ட்ரி கொடுக்கும் புகழ், நேராக சென்று செப் தாமுவின் காலில் மரியாதையாக விழுவது போல் செய்கிறார். இதனை பார்த்த வெங்கடேஷ் பட் புகழை ஓடி வந்து கிண்டலாக எட்டி உதைக்கிறார். பின்னணியிலும் கவுண்டமனியின் கவுண்டருடன் புகழ் கலாய்க்கப்படுகிறார். ஒருபுறம் காமெடியாக மக்கள் மத்தியில் இந்த புரோமோ டிரெண்டாகி வருகிறது.அதேசமயம், புகழை எட்டி உதைத்ததால் வெங்கடேஷ் பட்டை சிலர் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக ஒளிபரப்பான எபிசோடுகளில் போட்டியாளர்களை வெங்கடேஷ் பட் அடிப்பதாக ஏற்கனவே அவர் மீது பலரும் குற்றச்சாட்டு வைத்தனர். இதற்கு விளக்கம் அளித்த வெங்கடேஷ் பட், போட்டியாளர்களை உண்மையாக அடிக்கவில்லை நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே அப்படி செய்யப்பட்டது என விளக்கமளித்திருந்தார். நடிகை வித்யுலேகாவும், வெங்கடேஷ் பட்டிற்கு ஆதரவு தெரிவித்து "இது காமெடி நிகழ்ச்சி, நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக பாருங்க" என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்


நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map