கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகிய நித்தியா தாஸ்

கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகிய நித்தியா தாஸ்
Advertisement
எழுத்து அளவு

ஹிட் சீரியல்களில் ஒன்றான "கண்ணான கண்ணே" சீரியலில் பப்லு, நித்தியா தாஸ், நிமிஷிகா, ராகுல் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகை நித்தியா தாஸ் யமுனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியின் சித்தியாக நடித்து வந்தார். அவரது கதாபாத்திரம் சீரியலில் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடரிலிருந்து நித்தியா தாஸ் ஏன் விலகினார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இனி யமுனா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு, சின்னத்திரை வட்டாரங்களில் சோனியா போஸ் நடிப்பார் என பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கண்ணானே கண்ணே தொடர் இதுவரை 300 எபிசோடுகள் வெற்றிகரமாக கடந்துள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map