‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!.. : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ்
இயக்குனர் திருச்செல்வம் நீண்ட இடைவேளைக்கு பின் ‛எதிர்நீச்சல்" தொடரின் மூலம் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார். அந்த தொடருக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாரத வகையில் அந்த சீரியல் நிறைவுபெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் திருச்செல்வத்திடம் எதிர்நீச்சல் பார்ட் 2 குறித்து அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், "எல்லோருமே எதிர்நீச்சல்-2 எதிர்பார்க்கிறார்கள். இனி அதே பெயரை வைப்பதை விட அந்த கதையோடு பொருந்துகிற மாதிரி இன்னொரு கதை உருவாகியிருக்கிறது. அதற்காக நான் பல ஊர்களில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீரியலுக்கான ஆயத்த பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதிர்நீச்சல் வீட்டுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் புது சீரியலில் அந்த வீடும் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வீட்டுக்கு இப்போதும் நான் வாடகை கொடுத்து வருகிறேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து திருச்செல்வத்தின் அடுத்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சின்னத்திரை
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.