திமுக பொதுச்செயலர் பதவியை துறக்க துரைமுருகன் முடிவு MK Stalin |Durai Murugan |TR Baalu

திமுக பொதுச்செயலர் பதவியை துறக்க துரைமுருகன் முடிவு MK Stalin |Durai Murugan |TR Baalu

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 30, 2026
சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை, கள ஆய்வுக் குழு அறிக்கையாக சமர்ப்பித்த பின், கட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். கட்சியின் மாநில நிர்வாகத்தில் யார் யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து, ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறார். தேர்தல் தோல்விக்கு பின் துரைமுருகன், கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு சரிவர வருவதில்லை. ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், தன் பொதுச்செயலர் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும், ஆதரவாளர்களிடம் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தற்போது, திமுக பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலுவை பொதுச்செயலராக்க, கட்சி தலைமை முன்வந்தால், துரைமுருகன் எந்த எதிர்ப்பும் காட்ட மாட்டார். அதேநேரத்தில், ஸ்டாலின் குடும்பத்தினர் நெருக்கடி காரணமாக, வேறு யாருக்காவது தந்தால், துரைமுருகன் பதவி விலக மறுத்து விடுவார் என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map